சனி, 24 ஜூன், 2017

அன்பானவன், அசராதவன், அடங்காதவன்


சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடித்து வெளிவந்துள்ள ஒரு படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன். படத்தின் முதல் பாகம் இப்போது வந்துள்ளது. இரண்டாவது பாகம் இனிமே வரும். அப்படித்தான் சொன்னார்கள்.

மதுரையில் உள்ள ஒரு பெரிய ரவுடியின் கையாளாக இருப்பவர்  மதுர மைக்கேல் (சிம்பு). அடிதடி, காதல் இந்த இரண்டு வேலைகளை மட்டும் செய்கிறார். காதலி அடிதடிகளை விட்டு விட சொல்கிறார். இவர் கடைசியாக ஒரு கொலை செய்து விட்டுவிடுகிறேன் என்கிறார். அந்தக் கொலை செய்யும் போது போலீஸில் மாட்டிக்கொள்கிறார்.

பிறகு நண்பர்கள், அவரது காதலிக்கு அவசரமாக கல்யானம் நிச்சயம் செய்த நாளில் அவரை ஜெயிலை உடைத்து ரிலீஸ் செய்கின்றனர். ஆனால் கல்யாணத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடுகிறார். படத்தில் மற்றொரு புறம் மைக்கேல் என்ற சர்வதேச குற்றவாளியை போலீஸ் தேடுகிறது.

இடைவேளைக்கு பிறகு அஸ்வின் தாத்தா என்ற வேடத்தில் வரும் சிம்பு தமன்னாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். வேறெந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் இறுதியில் தமன்னா திக்கு சிவா என்பவனை தனது காதலன் என்று அறிமுகம் செய்கிறார். எனவே அஸ்வின் தாத்தா திக்கு சிவாவை கடத்தி வந்து விடுகிறார். அதோடு படம் முடிகிறது. அஸ்வின் தாத்தாவுக்கும், திக்கு சிவாவுக்குமான காட்சிகள் இரண்டாவது பாகத்தில் வெளிவரும்.

முதல் பாகத்தை மட்டும் பார்த்தால் படத்தை செம மொக்கை என்று சொல்லலாம். இடைவேளைக்கு முன்பு கொஞ்சம் காதல், சண்டை, இடைவேளைக்கு பின்பு தாத்தாவாக இருந்து கொண்டு தமன்னாவை காதலிக்கிற காட்சிகளை தவிர வேறெதுவும் இல்லை.

எல்லோரும் பார்க்கும் படியான படம் இல்லை. அவரது ரசிகர்கள் வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம். இந்த ஹீரோக்கள் என்று சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் ரசிகர்களை பைத்தியக்காரர்கள் என்று நினைத்து கொள்வார்கள் போல.

பாடல்கள் அதைவிட கொடுமை. ஐம்பத்து எட்டு வயது கிழவரான அஸ்வின் தாத்தா இருபத்தைந்து வயது பெண்ணான தமன்னாவை காதலிக்கிறார். இதிலே, “இன்னிக்கு நைட் மட்டும் நீ லவ் பண்ணா போதும்”னு ஒரு பாட்டு வேற. அதுக்கு பேருதான் காதல் போல.

துபாயிலே டான் ஆக இருந்த காட்சிகள், அஸ்வின் தாத்தா திக்கு சிவாவுக்கு இடையிலான காட்சிகள் வேண்டுமானால் இரண்டாவது பாகத்தில் வந்து பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கலாம். ஆனால் முதல் பாகம் விருந்தல்ல.

5 கருத்துகள்:

 1. இது போன்ற படங்களை பார்க்கவே தனியா ஒரு தைரியம் வேண்டும்.. உங்களின் அந்த தைரியத்துக்கு ஒரு சபாஷ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேற என்ன செய்ய சுரேஷ். எப்படி பட்ட படம் எல்லாம் பார்த்துட்டு இதையும் பார்க்க வேண்டி இருக்கு. நேத்து யார் முகத்துல முழிச்சனோ? தெரியல.

   நீக்கு
 2. ந்த ஹீரோக்கள் என்று சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் ரசிகர்களை பைத்தியக்காரர்கள் என்று நினைத்து கொள்வார்கள் போல.

  அருமை

  பதிலளிநீக்கு
 3. இனி எதுக்கு தியேட்டரல பாத்துகிட்டு..

  பதிலளிநீக்கு